காரமடை – டிசம்பர் 08, 2025:
வரவிருக்கும் சட்ட மன்ற தேர்தல்களை முன்னிட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை திமுக தேர்தல் முகாம் அலுவலகத்திலிருந்து “என் வாக்குச் சாவடி – வெற்றி வாக்குச் சாவடி” என்ற தலைப்பில் திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெற்றது.
இந்த காணொளிக் கூட்டம் கோவை வடக்கு மாவட்டம் காரமடை காந்திநகர் அருகிலுள்ள கலை மஹால் வளாகத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. கூட்டத்தில் கோவை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொ. ஆ. ரவி, முன்னாள் மாவட்ட செயலாளர் சி. ஆர். ராமச்சந்திரன், கவுண்டம்பாளையம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் மூலனூர் கார்த்தி, மேட்டுப்பாளையம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ஜெயக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.பி. சுப்பிரமணியம், டி.ஆர். சண்முகசுந்தரம், ஆர்.எஸ்.புரம் பகுதி செயலாளர் கார்த்திக் செல்வராஜ், காரமடை நகர பொறுப்பாளர் குருபிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், காரமடை திமுக ஒன்றிய செயலாளர்கள் சுரேந்திரன், எஸ்.எம்.டி. கல்யாணசுந்தரம், தாயனூர் பிரதீப், காந்தி, நகர செயலாளர்கள் அறிவரசு, முனுசாமி, அசரப் அலி, பேரூர் திமுக செயலாளர்கள் எம்.ஆர். உதயகுமார், சுரேஷ்குமார் ஆகியோரும், காரமடை நகர திமுக நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்றனர்.
கூட்டத்தில் திமுக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், வரவிருக்கும் தேர்தல்களுக்கு ஒவ்வொரு வாக்குச் சாவடியையும் வெற்றி வாக்குச் சாவடியாக மாற்றும் பணிகள், நிர்வாகிகளின் பொறுப்புகள், திமுக அரசின் மக்கள் நல திட்டங்களை அடிப்படை மட்டங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவான வழிகாட்டுதல்களை வழங்கினார்.


No comments:
Post a Comment